இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.இதில் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிபெற்று இருந்தது.
இதனைதொடர்ந்து இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இந்திய அணி:
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 48.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்களை எடுத்தது.இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான்(67),ரிஷாப் பந்த்(78),ஹார்திக் பாண்டியா(64) ஆகியோர் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.ரோஹித் சர்மா (37),விராட் கோலி(7) எதிர்பார்த்த அளவு விளையாடாமல் சற்று ஏமாற்றத்தை தந்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான சர்துல் தாக்கூர் 4 விக்கெட்களையும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களையும் நடராஜன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி:
அதன் பின்பு 330 ரன் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டையும் மூன்றாவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டையும் இழந்தது தடுமாறியது.டேவிட் மாலன் 50 மற்றும் சாம் கரண் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை அட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களான மார்க் வுட் 3 விக்கெட்களையும் ஆதில் ரஷீத் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
கோப்பையை கைப்பற்றிய இந்தியா:
ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்றிந்தது யார் இந்த கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவார் என்று பரபரப்பு கடைசி ஓவர் வரை தொற்றிக்கொண்டது.கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில்.இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்களை எடுத்தது.இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் ,டி20 வரிசையில் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…