விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…

நேற்று பிற்பகல் நடைபெற்ற RR vs RCB அணிகளுக்கு இடையான ஐபிஎல் ஆட்டத்தில் விராட் கோலி, சஞ்சு சாம்சனிடம் தனது இதயத்துடிப்பை சரிபார்க்க சொன்ன நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது.

Virat Kohli during RR vs RCB match 2nd Innings

ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. இதில் RCB அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் ராஜஸ்தானின் 173 ரன்களை சேஸ் செய்த் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, 15வது ஓவரில் RR வீரர் வனிந்து ஹசரங்கா வீசிய 15வது ஓவரில் அரைசதம் அடித்தார். அதன் பிறகு சற்று ஓய்வு எடுத்த விராட் கோலி, RR கேப்டன் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனை அழைத்து, தனது இதயத்துடிப்பை சரிபார்க்க சொன்னார்.

அவர்கள் பேசியதில் சிறுபகுதி ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி உள்ளது. அதில், “எனது இதய துடிப்பை சரி பாருங்கள்” என விராட் , சஞ்சுவிடம் கூறினார். அப்போது சஞ்சு தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸை கழட்டி வைத்துவிட்டு விராட் நெஞ்சை தொட்டு பார்த்துவிட்டு, “இப்போது பரவாயில்லை” எனக் கூறியது வரையில் பதிவாகி இருந்தது.

இதுபோல விராட் கோலி தனது இதயத்துடிப்பை சரிபார்க்க சக வீரர்களிடம் கூறியதில்லை. அதனால், கோலியின் இந்த செயல் அவருக்கு ஏதேனும் இதய பிரச்சனை இருக்கிறதா என்ற கேள்வியை பலரது மனதில் எழுப்பிவிட்டது. இருந்தும் அன்றைய நாளில் ஜெய்ப்பூரில் அதிகபட்ச வெப்பநிலை நிலவியது. ஏற்கனவே 20 ஓவர்கள் பீல்டிங் செய்த கோலி , 2வது இன்னிங்ஸில் தொடக்கம் முதல் விளையாடி இறுதி வரை அட்டமிழக்காமல் இருந்துள்ளார். அதனால் இது பெரிய அளவிலான பிரச்சனை இல்லை என்றும் கூறப்படுகிறது.

நேற்றைய போட்டியில் விராட் கோலி,  45 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்கள் அடித்து 62 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். 18வது ஓவரில் இலக்கை எட்டி RCB அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்