இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் – ஐசிசி நடவடிக்கை..!
முதல் டெஸ்டில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் விதித்து ஐசிசி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியதிலிருந்து மழையால் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்திய அணி முன்னிலை:
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர்.இதனால் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
பின்னர், தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 85.5 ஓவரில் 303 ரன்கள் எடுத்தனர். இதனால், 208 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது. 4-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து இருந்தனர்.
சமநிலை:
இதனையடுத்து,கடைசி நாளன்று இந்திய அணி வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டநிலையில் தொடர் மழை காரணமாக 5-ம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டு போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால்,இரு அணிகளும் 4-4 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் உள்ளன.
அபராதம்:
இந்நிலையில்,நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது இரு அணிகளும் ஓவர்களை வீச அதிக நேரங்களை எடுத்துக் கொண்டதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் குறைவான ஓவர்களை(slow over-rate) வீசியதாகவும் கூறி இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் அபராதத்தை இன்டர்நேஷனல் கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) விதித்துள்ளது.மேலும், இரண்டு அணிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் டெஸ்டில் எடுத்துள்ள தலா 4 புள்ளிகளில் இருந்து தலா 2 புள்ளிகளை ஐசிசி நீக்கியுள்ளது.
England and India have been fined and docked two points each from their ICC World Test Championship 2021-23 tally for slow over-rates in the Nottingham Test.
Details ????#ENGvIND | #WTC23https://t.co/tthEorqDe9
— ICC (@ICC) August 11, 2021
இதற்கு முன்னதாக,இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் குறைவான ஓவர்களை வீசியதன் காரணமாக அபராதமாக 4 புள்ளிகளை ஆஸ்திரேலியா அணி இழந்தது.இதனால்,ஆஸ்திரேலியா அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.