திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி ரோஹித் சர்மா (76*) குவித்த நிலையில் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Ro hit

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், நேற்று சென்னை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கம்பேக் என்றால் இப்படி இருக்கனும் என்பது போல அதிரடியாக ஆடினார் என்று சொல்லலாம். ரோஹித் ஷர்மாவின் அரைசதம் (76* ரன்கள், 45 பந்துகள், 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) என அவருடைய ஆட்டமும் மும்பை அணி விரைவாக வெற்றிபெற ஒரு காரணமாக அமைந்தது.

வெற்றிபெற்ற பிறகு ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. மீண்டும் ரோஹித் பழைய பார்முக்கு வந்தது குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் பெருமையாக பேசி வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் ஹிட் மேன் இஸ் பேக் என கூறி வருகிறார்கள். போட்டி முடிந்த பிறகு மும்பை அணியை சேர்ந்த வீரர்களும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் பற்றி பேசியிருக்கிறார்கள்.

முதலில் பேசிய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ” ரோஹித் சர்மாவின் ஃபார்மைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் ஃபார்மில் இருக்கும்போதெல்லாம், எதிரணி தோல்வி அடைந்து விடும். அந்த அளவுக்கு அதிரடியாக விளையாடுவார். அதற்கு ஒரு உதாரணம் தான் அவர் இன்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய விளையாட்டு” என பேசியிருந்தார்.

அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில் ” இந்த வெற்றி எங்களுக்கு பெரிய உற்சாகத்தை அளிக்கிறது. ரோஹித் மற்றும் நானும் சேர்ந்து ஆடியது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும். அவரை போல ஒரு லெஜெண்ட் வீரருடன் பேட்டிங் செய்யும் போது எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் வெற்றிபெறலாம். இந்த போட்டியில் அவர் அதிரடியாக விளையாடினார். இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன, நாங்கள் இதே மாதிரி அதிரடியாக விளையாடி  தொடர வேண்டும்” எனவும் பேசினார்.

கடைசியாக போட்டி முடிந்த பின் பேசிய ரோஹித் ” நீண்ட நாட்களாக (மோசமான பார்ம்) இப்படியே  இருப்பதால், உங்களை நீங்களே சந்தேகிக்க ஆரம்பித்து, வித்தியாசமான விஷயங்களை செய்ய முயல்வது எளிது. ஆனால், அதற்கு பயிற்சி தேவை. எனவே, நான் நன்றாக பயிற்சி செய்து, பந்தை நன்றாக அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மனதில் தெளிவு இருக்கும்போது, இதுபோன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்” எனவும் ரோஹித் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்