நான் பார்த்ததில் மிகவும் கடின உழைப்பாளி இம்ரான் கான் – கபில் தேவ்.!

Default Image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இம்ரான் கான் மற்றும் சச்சினை பற்றி கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கடந்த 1983-ல் இந்தியா நடந்த உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அதற்கு பிறகு 1999 அக்டோபர் முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிற்காக செய்த சாதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.

இந்நிலையில் சமீபத்தில் கபில் தேவ் அளித்த பேட்டி ஒன்றில் நான் மிகச் சிறந்தவன் என்று நான் கூறமாட்டேன், ஆனால் நான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் என்று தன்னை தானே பற்றி கூறினார், அதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றியும் கூறியுள்ளார்.

இம்ரான் கான் சிறந்த கிரிக்கெட் வீரர், அவர் மிகவும் இயல்பானவர் என்று நான் சொல்லமாட்டேன், நான் பார்த்ததில் மிகவும் கடின உழைப்பாளி வீரர். மேலும் அவர் தொடங்கிய போது, ​​அவர் ஒரு சாதாரண பந்து வீச்சாளரைப் போல தோற்றமளித்தார்.

ஆனால் பின்னர் அவர் மிகவும் கடின உழைப்பாளி வேகப்பந்து வீச்சாளராக ஆனார் அவர் தானாகவே கற்றுக்கொண்டார், பின்னர் அவர் தனது பேட்டிங்கிலும் மிகவும் சிறப்பாக விளையாடி அனைவரின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சச்சின் பற்றி கூறுகையில் சச்சினிடம் நிறைய தனி திறமை உள்ளது. அவருக்கு எப்படி சதம் அடிக்க வேண்டும் என்பது மிகவும் நன்றாக தெரியும். ஆனால் அவருக்கு சதத்தை எப்படி 200, 300ஆக மாற்ற வேண்டும் எனத் தெரியாது, மேலும் சச்சின் மூன்று முச்சதங்கள், இன்னும் 10 இரட்டை சதங்கள் அடித்து இருக்கலாம். ஏனெனில், அவரால் வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களின் ஒவ்வொரு ஓவர்களிலும் ஒரு பவுண்டரி அடிக்க முடியும்என்றார் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்