IRELAND VS INDIA:சுரேஷ் ரெய்னா அரை சதம்!இந்திய அணி 157 ரன்கள்!
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடுவதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் தோனி,தவான், புவனேஸ்வர் ,பூம்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதை தொடர்ந்து தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ராகுல் களமிறங்கினர். ஆனால் விராட் கோலி 9 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் தற்போது வரை இந்திய அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் அடித்துள்ளது.தற்போது சுரேஷ் ரெய்னா 34 பந்துகளில் தனது 5 வது அரை சதத்தை பதிவு செய்தார் .களத்தில் ரெய்னா 63,பாண்டே 6 ரன்களுடனும் உள்ளனர்.
முன்னதாக இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 28 பந்துகளில் தனது 4 வது அரை சதத்தை பதிவு செய்தார்.ராகுல் 70 ரன்களிலும் ,ரோகித் 0 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.