அடுத்த டெஸ்டில் இந்திய அணி கடுமையாக போராடவேண்டி இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு சுருண்டது. 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதனைதொடர்ந்து, 399 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணி 137 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இதன் பின்னர் வெற்றி குறித்தது இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசுகையில், சிட்னியில் வென்று தொடரை கைப்பற்றுவது தான் குறிக்கோள் ஆகும். 70 ஆண்டுகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதில்லை அதை நிறைவெற்ற கடுமையாக போராடவேண்டி இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…