ஃபார்ம் சரியில்லை! அந்த 3 வீரர்களை கழட்டிவிடும் டெல்லி கேப்பிட்டல்ஸ்?
டெல்லி அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்தில் 3 நட்சத்திர வீரர்களை விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : ஐபிஎல் 2025-ஆண்டுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. மெகா ஏலம் என்பதால் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கவுள்ளார்கள். எந்தெந்த அணி நிர்வாகம் எந்தெந்த, வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அப்படி இருந்தாலும் கூட , நம்பத்தக்க கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து அணிகள் விடுவிக்க நினைக்கும் வீரர்கள் குறித்த தகவல் பற்றியும், ஏலத்தில் எடுக்கவுள்ள வீரர்கள் குறித்த தகவலும் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி 3 தரமான ஆல்ரவுண்டர்களான கிளென் மேக்ஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, ரஷித் கான் ஆகியோரை ஏலத்தில் எடுக்கவுள்ளதாக தகவல்கள் பரவி இருந்தது.
அதனைத் தொடர்ந்து, தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மூன்று வீரர்களை விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வீரர்கள் யார் என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரித்வி ஷா
ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 24.75 சராசரியில் 198 ரன்கள் எடுத்தார். ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாள் கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவருடைய பேட்டிங் அமையவில்லை என்பதால் டெல்லி அணி அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷாய் ஹோப்
மேற்கிந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருந்தாலும் 9 போட்டிகளில் விளையாடிய போதிலும், அவர் 22.87 சராசரியில் 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் . அவருடைய ரன்கள் பெரிய அளவில், அணிக்கு உதவவில்லை என்பதால் அவரை இந்த முறை அணி விடுவிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
யாஷ் துல்
இவர் விளையாட வந்த ஆரம்ப காலத்தில் “தாக்கத்தை ஏற்படுத்தகூடிய இளம் வீரர்” என்று புகழப்பட்ட யாஷ் துல், ஐபிஎல் 2023 இல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டார் என்றே கூறலாம். அந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடிய போதிலும், அவர் 5.33 என்ற சராசரியில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதால் அவரையும் அணி விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.