இன்று முதல் டிஎன்பிஎல் டி 20 போட்டிகள் தொடங்குகிறது..!

இன்று இரவு 7.30 மணிக்கு லைகா கோவை கிங்ஸ் , சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் முதல் போட்டி தொடங்கவுள்ளது.
தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கொரோனா காரணமாக ரசிகா்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகின்றது.
டிஎன்பிஎல் 5-வது சீசன் இன்று தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. டி.என்.பி.எல் போட்டிகள் முழுவதையும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடரில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
இன்று இரவு 7.30 மணிக்கு லைகா கோவை கிங்ஸ் , சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் முதல் போட்டி தொடங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025