இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 378 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெவென் கான்வே 200 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 275 ரன்கள் எடுத்தது.
இதனால், 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை நியூசிலாந்து தொடங்கியது. 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்தபோது நியூசிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தனர். 273 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
5-வது நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழந்து 170 ரன்கள் எடுத்து களத்தில் ராய் பர்ன்ஸ் 60, போப் 20 ரன்களுடன் இருந்தனர். இதனால், முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையே 2-வது மற்றும் கடைசி போட்டி வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…