ஐசிசியின் 4 விதமான கோப்பைகளை வென்ற முதல் அணி..! ஆஸ்திரேலியா அசத்தல் சாதனை..!

ICC Men's Trophy

ஆஸ்திரேலிய அணி ஐசிசியின் 4 விதமான கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், 2023ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பையை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணி, ஐசிசியின் 4 விதமான கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது. முன்னதாக, 1987, 1999, 2003, 2007, 2015 ம் ஆண்டுகளில் நடந்த ஒரு நாள் உலகக்கோப்பை, 2006, 2009ம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி, 2021ம் ஆண்டில் டி-20 உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்