இந்தியா vs இங்கிலாந்து டி20 : வெற்றி யாருக்கு? பட்லர் தலைமையிலான வீரர்கள் பட்டியல் இதோ…
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளானது கொல்கத்தா (மேற்கு வங்கம்), சென்னை (தமிழ்நாடு), ராஜ்கோட் (குஜராத்), புனே (மகாராஷ்டிரா) , அகமதாபாத் (குஜராத்), கட்டாக் (ஒடிசா) மும்பை (மகாராஷ்டிரா) , நாக்பூர் (மகாராஷ்டிரா) என ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு மைதானத்தில் நடைபெற உள்ளது
ஜனவரி 22 (இன்று), ஜனவரி 25, ஜனவரி 28, ஜனவரி 31, பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளன. அதேபோல, பிப்ரவரி 6, பிப்ரவரி 9, பிப்ரவரி 12 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் மதியம் 1.30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று, முதல் டி20 போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவும், இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் தலைமை தாங்க உள்ளனர்.
இங்கிலாந்து அணி சார்பாக இன்றைய போட்டியில் களமிறங்கும் வீரர்கள் பட்டியலை அந்த அணி வெளியிட்டுள்ளது. அதில், ஜோஸ் பட்லர் (கேப்டன்) , சால்ட் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட் , ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட் ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணி சார்பாக 15 பேர் கொண்ட அணியில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா ஆகியோர் உள்ளனர். இதில் இன்று களமிறங்கும் 11 பேர் அடங்கிய பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.