Sunil Narine , Gautam Gambir [file image]
கவுதம் கம்பீர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்ட கவுதம் கம்பீர், சுனில் நரேனுடன் பகிர்ந்து கொண்ட சில விஷயத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டில் (2024) நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியை கோப்பையை வெல்வதற்கு ஒரு பெரிய பங்காற்றி இருப்பார் கவுதம் கம்பீர். இதன் மூலம் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியும் இவருக்கு தான் என கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேச்சுகள் நிலவுகிறது.
இந்நிலையில், இவர் ஸ்போர்ட்ஸ்கீடா பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில் சுனில் நரைனை குறித்தும், அவருடன் ஏற்பட்ட தருணங்களை குறித்தும் அதில் பகிர்ந்திருந்தார். அவர் பேசிய போது, “நானும் நரைனும் ஒரே மாதிரியான குணங்களை கொண்டவர்கள் தான்.
எங்களுடைய உணர்ச்சிகளும் அப்படித்தான் இருக்கும். 2012-ல் சுனில் நரேன் முதன் முதலில் ஐபிஎல் தொடருக்காக ஜெய்ப்பூரில் கேகேஆர் அணிக்காக இணைந்தார். அந்த தருணம் எனக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது.
நாங்கள் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தோம். நான் அவரை மதிய உணவிற்கு வரச் சொன்னேன். அவர் மிகவும் வெட்கப்பட்டார், மதிய உணவின் போது அவர் ஒரு வார்த்தை கூட எண்ணிடமோ அல்லது வேறு யாருடனும் பேசவில்லை.
இறுதியில், அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதுதான் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி அது என்னவென்றால், ‘நான் என் காதலியை ஐபிஎல்-க்கு அழைத்து வரலாமா?,” என்று கேட்டார். அதை நான் இன்னும் மறக்கவில்லை. மேலும், அன்றைய நாட்களில் அவர் என்னுடன் அவ்வளவாக பேசமாட்டார்.
ஆனால் இப்போது நாங்கள் எதை பற்றினாலும் பேசுகிறோம். அவரை நான் ஒரு நண்பரகவோ, அணியில் விளையாடும் ஒரு வீரராகவோ நினைக்கவில்லை. அவர் எனக்கு உடன் பிறந்த தம்பியை போன்றவர்“ ,என்று கம்பீர் கூறி இருந்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…