இறுதி போட்டிக்குள் நேரடியாக களமிறங்குமா சென்னை.? குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை.!

CSKvGT PQualifier 1

சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான, நேரடி IPL இறுதி போட்டிக்குள் நுழையும் முதல் பிளே ஆப் போட்டி இன்று நடைபெற உள்ளது. 

இந்த வருட ஐபிஎல் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்து தற்போது கோப்பையை கைப்பற்றும் பிளே ஆப் போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

புள்ளிபட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள அணிகளில் இருந்து முதல் 2 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேரடி இறுதி போட்டிக்காக தேர்வு செய்யப்படும். அதில் வெற்றிபெறும் அணி நேரடி இறுதி போட்டிக்கு தேர்வாகும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

அதன்படி, முதல் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணியளவில் இறுதி போட்டிக்கான நேரடி போட்டியில் களமிறங்க மோத உள்ளன.

அடுத்ததாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. இதில் தோல்வி பெரும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெரும் அணியானது, இன்று தோல்வி பெரும் அணியுடன் விளையாடும். அதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்குள் செல்லும்.

ஆகவே , இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, ஹிர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்குள் நுழையுமா அல்லது இறுதி போட்டிக்கான இன்னொரு வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்