டி20 போட்டிகளில் முதல் இடத்தில் உள்ள கேப்டன் , துணை கேப்டன் !
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் மூன்று டி20 போட்டிகள் முடித்து உள்ளது.
முதல் இரண்டு போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
மூன்றாவது டி 20 போட்டியில் முதலில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் சேர்த்தனர்.பிறகு இறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் குவித்து . இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் கேப்டன் கோலி மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கினார்.சிறப்பாகவும் , அதிரடியாகவும் விளையாடிய கோலி 59 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் டி20 போட்டிகளில் விராட் கோலி 50 ரன்னிற்க்கு மேல் 21 முறை அடித்து உள்ளார்.
இதற்கு முன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் 50 ரன்னிற்க்கு மேல் 21 முறை அடித்து இருந்தார். தற்போது விராட் கோலியும் 50 ரன்னிற்க்கு மேல் 21 முறை அடித்து இருவரும் முதலித்தில் உள்ளார்.