தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் போட்டி;பதிலடி கொடுக்குமா இந்தியா?..!

Published by
Edison

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில்,இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) இந்திய நேரப்படி 2.00 மணிக்கு  தொடங்குகிறது.

இதற்கிடையில்,இந்திய ஒரு நாள் போட்டி அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா தசைப்பிடிப்பால் விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார்.வெங்கடேஷ் அய்யர்,ஷிகர் தவான்,விராட் கோலி,சூர்யகுமார் யாதவ் அணியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

அதே சமயம்,தனது சொந்த மண்ணில் விளையாடும் தென்ஆப்பிரிக்க அணி பவுமா தலைமையில் களமிறங்கவுள்ளது.டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஒரு நாள் தொடருக்காக திரும்பியிருப்பது அணியின் பலமாகும்.

முன்னதாக,தென் ஆப்ரிக்காவுடனான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி,தற்போது ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெற்றி முனைப்பில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

அணிகள்:

இந்தியா அணியின் கணிக்கப்பட்ட வீரர்கள்: லோகேஷ் ராகுல் (கேப்டன்),ஷிகர் தவான்,விராட் கோலி,சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர்,ஜஸ்பிரித் பும்ரா,யுஸ்வேந்திர சாஹல்,ரிஷாப் பண்ட்,வெங்கடேஷ் அய்யர்,தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் அல்லது புவனேஷ்வர்குமார், அஸ்வின்,

தென்ஆப்பிரிக்கா அணியின் கணிக்கப்பட்ட வீரர்கள்: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான்,பவுமா (கேப்டன்), மார்க்ராம்,மார்கோ ஜான்சென், பெலக்வாயோ, இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.வான்டெர் துஸ்சென்,டேவிட் மில்லர்,பிரிட்டோரியஸ் அல்லது ஜார்ஜ் லின்ட்.

Recent Posts

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு! 

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

2 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

2 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

3 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

3 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

3 hours ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

3 hours ago