CSKvsRCB : ஐபிஎல் 2024, 17-வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால். இந்த முடிவை டாஸ் வென்றவுடன் பெங்களூரு அணியின் கேப்டன் ஆன ஃபாப் டுப்ளஸி எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 31 முறை நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் 20 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று இருக்கிறது. பெங்களூர் அணி 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி இருந்து வருகிறது.
சென்னை அணியின் வீரரான சிவம் துபே, ஷர்துள் தாகூர் ப்ளெயிங் 11-ல் இடம்பெறவில்லை. ஒரு வேலை இம்பாக்ட் பிளேயாராக விளையாடுவர் என்பது தெரிகிறது. அதே போல சென்னை அணியில் இளம் சுழற் பந்து வீச்சாளரான சமீர் ரிஸ்வி இடம் பெற்றுள்ளார்.
சென்னை அணி வீரர்கள் :
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ் பாண்டே.
பெங்களூரு அணி வீரர்கள் :
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத், கர்ன் ஷர்மா, அல்சாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ்.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…