இந்தியா – இங்கிலாந்து இன்று மோதும் முதல் நாள் டெஸ்ட் தொடர்…!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் நாள் டெஸ்ட் தொடர் இன்று நடைபெறவுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.இதனைத் தொடர்ந்து,5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.இதற்கிடையில்,இந்திய அணி டர்ஹாமில் இங்கிலாந்தின் கவுண்டி லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில்,இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் நாள் டெஸ்ட் தொடர் இந்திய நேரப்படி,இன்று மாலை 3.30 மணிக்கு நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
A heavyweight clash on the cards as England and India begin a five-match Test series in Nottingham ????#ENGvIND first Test preview ????#WTC23
— ICC (@ICC) August 3, 2021
மாயங்க் அகர்வால் விலகல்:
ஆனால்,மாயங்க் அகர்வால் நேற்று வலைப்பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்ட போது,ஹெல்மட்டில் பந்து தாக்கியதனால் அவர் போட்டியில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதனால்,அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சுப்மன்கில் காயம் அடைந்ததால் அவரும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
பென்ஸ்டோக்ஸ் ஓய்வு:
அதேபோல,இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டரான பென்ஸ்டோக்ஸ் தனது மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற விடுப்பு மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து விலகியுள்ளதாகவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.
இந்திய அணி இங்கிலாந்தில் 2007 ஆம் ஆண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.இதனையடுத்து,கடைசியாக 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.இந்நிலையில், தற்போது தொடரை இந்தியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கணிக்கப்பட்ட இந்திய லெவன் அணி: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்/ஹனுமா விஹாரி, சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (C), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ்/ஷர்துல் தாக்கூர், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
கணிக்கப்பட்ட இங்கிலாந்து லெவன் அணி: ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லி, ஜாக் க்ராலி, ஜோ ரூட் (c), ஒல்லி போப்/ஜானி பேர்ஸ்டோ, டான் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், ஒல்லி ராபின்சன், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.