நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் மிகவும் விறுவிறுப்பாக இன்று சவூதி அரேபியாவில் நடைபெற்றது.

TATA IPL Auction 2025 Day 1

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த மெகா ஏலமானது பயங்கர விறுவிறுப்பாகவே சென்றது. அதன்படி, இன்றைய நாளில் நடந்த பல மாற்றங்கள் வரும் ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களை கவரும் வண்ணமே அமைந்துள்ளது.

அதன்படி, பல அதிரடி மாற்றங்களும், போட்டிகளும் இன்றைய நாளில் நடைபெற்றது. ஆகையால், இன்றைய நாளில் ஏலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளும், இன்றைய நாள் நிறைவில் 10 அணிகள் எடுத்திருக்கும் வீரர்களின் பட்டியலையும், ஒவ்வொரு அணிகளிடம் மீதம் இருக்கும் இருப்புத் தொகையையும் பற்றி பார்ப்போம்.

ஏலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் :

  • ஏலம் தொடங்கிய உடனே முதல் வீரராக அர்ஷதீப் சிங், பஞ்சாப் அணிக்காக ரூ.18 கோடிக்கு ஏலம் சென்றார்.
  • நட்சத்திர வீரரான ஷ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணிக்காக ஏலம் சென்றார்.
  • நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ அணிக்காக ஏலம் சென்றார், இதன் மூலம் ஐபிஎல்
  • வரலாற்றில் அதிகத் தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரிஷப் பண்ட்.
  • மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு முக்கியவீரரான கே.எல்.ராகுல் டெல்லி அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலம் சென்றார்.
  • 9 வருடங்களுக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். அவரை சென்னை அணி ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அணியும், வீரர்களும் :

இன்றைய நாளில் மெகா ஏலத்தில் 10 அணிகளும் ஏலத்தில் எடுத்த வீரர்களின் பட்டியலையும், 10 அணிகளின் இருப்புத் தொகையையும் பற்றி பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

நூர் அகமது (10 கோடி), ரவி அஸ்வின் (9.75 கோடி), டேவான் கான்வே (6.25 கோடி), கலீல் அகமது (4.80 கோடி), ரச்சின் ரவீந்திரா (6 கோடி), ராகுல் திரிபாதி (3.40 கோடி), விஜய் ஷங்கர் (1.20 கோடி)

இருப்புத் தொகை : 15.60 கோடி

டெல்லி அணி :

கே எல் ராகுல் (14 கோடி), மிட்செல் ஸ்டார்க் (11.75 கோடி), டி. நடராஜன் 10.75 கோடி, ஜேக் ஃப்ரேசர்-மெகுர்க் (9 கோடி), ஹாரி புரூக் (6.25 கோடி), அசுதோஷ் சர்மா (3.80 கோடி), மோஹித் சர்மா (2.20 கோடி), சமீர் ரிஸ்வி (95 லட்சம்), கருண் நாயர் (50 லட்சம்).

இருப்புத் தொகை : 13.80 கோடி

குஜராத் டைட்டன்ஸ் :

ஜோஸ் பட்லர் (15.75 கோடி), முகமது சிராஜ் (12.25 கோடி), ககிசோ ரபாடா (10.75 கோடி), பிரசித் கிருஷ்ணா (9.50 கோடி),மஹிபால் லோமரோர் (1.70 கோடி), குமார் குஷ்க்ரா (65 லட்சம்), நிஷாந்த் சிந்து (30 லட்சம்), அனுஜ் ராவத் (30 லட்சம்), மானவ் சூதர் (30 லட்சம்)

இருப்புத் தொகை : 17.50 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

வெங்கடேஷ் ஐயர் (23.75 கோடி) , அன்ரிச் நார்ட்ஜே (6.50 கோடி), குயின்டன் டி காக் (3.60 கோடி), அங்கிரிஷ் ரகுவன்ஷி (3 கோடி) , ரஹ்மானுல்லா குர்பாஸ் (2 கோடி), வைபவ் ஆரோரா (1.80 கோடி)

இருப்புத் தொகை : 10.05 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :

ரிஷப் பண்ட் (27 கோடி), அவேஷ் கான் (9.75 கோடி), டேவிட் மில்லர் (7.50 கோடி),அப்துல் சமத் (4.20 கோடி), மிட்செல் மார்ஷ் (3.40 கோடி), ஐடன் மார்க்ராம் (2 கோடி), ஆர்யன் ஜூயல் (30 லட்சம்).

இருப்புத் தொகை : 14.85 கோடி

மும்பை இந்தியன்ஸ் :

டிரெண்ட் போல்ட் (12.50 கோடி), நமன் திர் (5.25 கோடி) , ராபின் மின்ஸ் (65 லட்சம்), கரண் சர்மா (50 லட்சம்).

இருப்புத் தொகை : 26.10 கோடி

பஞ்சாப் கிங்ஸ் :

ஷ்ரேயாஸ் ஐயர் (26.75 கோடி), யுஸ்வேந்திர சாஹல் (18 கோடி), அர்ஷ்தீப் சிங் (18 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (11 கோடி), நேஹால் வதேரா (4.20 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (4.20 கோடி), விஜயகுமார் வைசாக் (1.80 கோடி), யஷ் தாகூர் (1.60 கோடி), ஹர்ப்ரீத் ப்ரார் (1.50 கோடி), விஷ்ணு வினோத் (95 லட்சம்).

இருப்புத் தொகை : 22.50 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் :

ஜோஃப்ரா ஆர்ச்சர் (12.50 கோடி), வனிந்து ஹசரங்கா (5.25 கோடி), மகேஷ் தீக்ஷனா (4.40 கோடி), ஆகாஷ் மத்வால் (1.20 கோடி), கார்த்திகேயா சிங் (30 லட்சம்)

இருப்புத் தொகை : 17.35 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :

ஜோஷ் ஹேசில்வுட் (12.50 கோடி), பில் சால்ட் (11.50 கோடி), ஜிதேஷ் சர்மா (11 கோடி), லியாம் லிவிங்ஸ்டன் (8.75 கோடி), ராசிக் தர் (6 கோடி), சுயாஷ் சர்மா (2.60 கோடி)

இருப்புத் தொகை : 30.65 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

இஷான் கிஷன் (11.25 கோடி), முகமது ஷமி (10 கோடி), ஹர்ஷல் படேல் (8 கோடி), அபினவ் மனோகர் (3.20 கோடி), ராகுல் சாஹர் (3.20 கோடி), சிமர்ஜித் சிங் (1.50 கோடி), ஆடம் ஜம்பா (2.40 கோடி), அதர்வா டைடே (30 லட்சம்)

இருப்புத் தொகை : 5.15 கோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்