காட்டுத்தீயால் இணைந்த ஜாம்பவான்கள் ! பாண்டிங் அணிக்கு சச்சின் கோச்

Published by
Venu

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவில்  ஏற்பட்ட காட்டுத்தீ  மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் மெல்போர்னில் இன்று  “  புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் ”(BushfireCricketBash) என்ற காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர்சென்றனர்.

இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் கில் கிறிஸ்ட் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் விளையாடியது. இப்போட்டியில் ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளர்களாக சச்சின் டெண்டுல்கரும் ,கில் கிறிஸ்ட் அணிக்கு பயிற்சியாளர்களாக டிம் பெயின் நியமிக்கப்பட்டனர்.பாண்டிங் அணியில் 9 வீரர்கள் உட்பட 2 வீராங்கனைகள் இடம்பெற்றனர். கில் கிறிஸ்ட் அணியில் 10 வீரர்கள் உட்பட 1 வீராங்கனை இடம்பெற்றனர்.

பாண்டிங் அணி :

ரிக்கி பாண்டிங் (கேப்டன் ) ,மத்தியூ ஹெய்டன்,லான்ச்சர்,பிரைன் லாரா ,பிராட் ஹாட்டின்,பிரெட் லீ ,வாசிம் அக்ரம் ,டேனியல் கிறிஸ்டியன்,லுக் ஹோட்ஜ் ,எலைஸி விலனி (மகளீர்)  மற்றும் போபே  (மகளீர்)  ஆகியோர் இடம்பெற்றனர்.  

கில் கிறிஸ்ட் அணி :

கில் கிறிஸ்ட் (கேப்டன்),வாட்சன்,பிராட் ஹோட்ஜ்,யுவராஜ் சிங்,பிளாக் வெல் (மகளீர்) ,ஆண்ட்ரே சைமண்ட்ஸ் ,கோர்ட்னி வால்ஸ் ,நிக்,பீட்டர் சிடில்,அகமது,கேமரோன் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றனர்.முதலில் பேட்டிங் செய்த பாண்டிங் அணி10 ஓவர்களில் 104 ரன்கள் அடித்தது.இதன் பின்னர் களமிறங்கிய கில் கிறிஸ்ட் அணி 10 ஓவர்களில் 103 ரன்கள் மட்டுமே அடித்தது.இதன் மூலம்  இந்த போட்டியில் பாண்டிங் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்த போட்டிக்கு நடுவே, டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின் டெண்டுல்கர், தோள்பட்டை காயம் காரணமாக பேட்டிங்கில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும், ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்ய தயார் என பதிவிட்டார். இந்நிலையில் இன்று  “ புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் ”(BushfireCricketBash) கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில்  , எல்லிஸ் பெர்ரி பந்து வீச  சச்சின் களமிறங்கினார்.அப்பொழுது தான் சந்தித்த முதல் பந்தை சச்சின் பவுண்டரிக்கு அடித்தார்.சச்சின் பல ஆண்டுகள் கழித்து விளையாடியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

26 minutes ago

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த…

29 minutes ago

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

1 hour ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

2 hours ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

2 hours ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

3 hours ago