இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு…!

Published by
Edison

இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில்,இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை நேற்று அறிவித்துள்ளது.

அதில்,எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்ட ராபின்சன் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்.பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜானி பேர்ஸ்டோவுக்கு அவரது டெஸ்ட் வாழ்க்கையை புதுப்பிக்க மற்றொரு வாய்ப்பை இ.சி.பி. வழங்கியுள்ளது. மேலும்,தற்போது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக அபார சதம் எடுத்த ஹசீப் ஹமீது இடம்பெற்றுள்ளார்.

ஆனால்,வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸுக்கு முன்னதாக ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்பதால் அவர்கள் இருவரும் அணியில் இடம்பெறவில்லை.

இங்கிலாந்தின் 17 பேர் கொண்ட அணி :

ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டோம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, சாம் குர்ரான், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், டோம் சிபிலி, பென் ஸ்டோக்ஸ்,மார்க் உட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா VS இங்கிலாந்து கவுண்டி லெவன் :

டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் இந்திய அணி, கவுண்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.இப்போட்டியில்,விராட் கோலி பங்கேற்காதாதால்,இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார்.

இதில்,இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், கவுண்டி லெவன் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து சுருண்டது.எனவே,91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Published by
Edison

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

11 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

14 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

15 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

17 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

18 hours ago