டெஸ்ட் மேட்ச் ஆடுங்க… கழட்டிவிடப்பட்ட ரிஷப் பந்த்..இலங்கைக்கு எதிராக விளையாடும் இந்திய வீரர்கள்?

Published by
பால முருகன்

SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் நடைபெறவுள்ள மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள்  போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தத் தொடர் ஜூலை 26-ம் தேதி தொடங்கும், முதல் டி20 ஐ பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் 2024 டி 20 உலககோப்பையை வென்று அசத்திய மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதே சமயம் இலங்கை தொடருக்கான டி20 அணியில் உலகக்கோப்பையில் விளையாடி  சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் ஜிம்பாப்வேயில் சிறப்பாக விளையாடிய நிலையில், அவர்களும் அணியில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.  ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் கூறியுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் வரும் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு குறைவு எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இலங்கை டி20 போட்டிக்கான இந்திய அணி  சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், துருவ் ஜூரல், அவேஷ் கான், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் தேஷ்பான்/துஷ்பான்

விளையாட வாய்ப்பு இருக்கும் வீரர்கள் : ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (c), ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்/துஷார் தேஷ்பாண்டே விளையாடலாம் என எதிர்பார்ப்பு.

Published by
பால முருகன்

Recent Posts

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

12 minutes ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

1 hour ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

2 hours ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

2 hours ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

3 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

4 hours ago