ஐபிஎல் 2024 : பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட் செய்த ஒரு கேவலமான செயலை போட்டு உடைத்த இளம் வீரர் நாராயண் ஜெகதீசன்.
கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திரிகாந்த் பண்டிட்டை பற்றி தமிழக இளம் வீரரான நாராயண் ஜெகதீசன் நேற்று முன்தினம் கொல்கத்தா, டெல்லி இடையேயான போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையில் சில அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து பேசி இருந்தார். சந்திரகாந்த் பண்டிட் ஒரு ஒழுக்க மற்ற முறையிலும், முட்டாள் தனமான அணுகுமுறையும் கொண்டவர் ஆவார்.
மேலும், இவர் கொல்கத்தா அணிக்காக இடம் பெற்றது முதல் அவரது பயிற்சி முறைகள் எல்லாமே பேசும் பொருளாகவே இருந்து உள்ளது. அவரது கவனங்கள் எல்லாமே உடைகளிலும், நடத்தையிலும் மட்டுமே இருக்கும் என்று சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அவரது பயிற்சியில் ஈடுபட்ட போது கூறி இருந்தனர். அதே போல தமிழக வீரரான நாராயண் ஜெகதீசன் பல வருடங்கள் சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார்.
அதன் பிறகு அவரை கொல்கத்தா அணியின் நிர்வாகம் வாங்கியது. கடந்த 2 வருடங்கள் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருக்கும் அவர் சந்திரிகாந்த்தின் கீழ் பயிற்சியிலும் ஈடு பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா அணியின் பயிற்சி முகாமில் ஒருநாள் நடந்த சம்பவம் பற்றி ஜெகதீசன் பேசினார்.
அவர் பேசுகையில், ” சந்திரகாந்த் ஒரு மிலிட்டரி பயிச்சியாளர் ஆவர். அவரது ரூல்ஸ் மற்றும் பயிற்சி முறைகள் எல்லாமே எல்லாமே மிலிட்டரி வடிவில் இருக்கும். இதற்கு உதாரணமாக ஒரு நாள் அவர் எங்களிடம் ‘நாளை ஸ்லீவ்லெஸ் டே’ என்று அறிவித்தார். அதாவது அன்றைய பயிற்சி நாளில் ஸ்லீவ்லெஸ் அணிந்து தான் வர வேண்டும் என்று சந்திரகாந்த் கூறினார்.
அப்போது அதனை முற்றிலும் மறந்து எதிர்பாராத விதமாக வருண் சக்கரவர்த்தி முழு கை டி-ஷர்ட் (T-shirt) அணிந்து வந்தார். அப்போது அதனை பார்த்த சந்திரிகாந்த் கத்தரிக்கோலை எடுத்து அவரிடம் போய் அவரது இரண்டு டி-ஷர்ட்டில் உள்ள கைகளை வெட்டி எரிந்து விட்டார். அந்த நிகழ்வு வருணையும், என்னையும் மிகவும் பாதித்தது”, என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையின் போது கூறினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…