மைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் பெயர் வைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு !
டெல்லியில் உள்ள ஷா பெரோஸ் மைதானத்தில் உள்ள ஒரு பகுதிக்கு விராட் கோலியின் பெயரை வைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்து உள்ளது.கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்களின் சொந்த ஊரில் உள்ள மைதானத்தில் உள்ள ஒரு பகுதிக்கு அவர்களின் பெயரை வைப்பது வழக்கமாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களின் பெயரை அவர்களின் சொந்த ஊரில் உள்ள மைதானத்தின் ஒரு பகுதியில் ஏற்கனேவே வைக்கப்பட்டு உள்ளது. வீரர்கள் ஓய்வு அறிவித்த பின்னர் பெயரை வைப்பது தான் வழக்கம்.
ஆனால் விளையாடி கொண்டு இருக்கும் போது மைதானத்தின் ஒரு பகுதிக்கு பெயர் வைப்பது கடினம்.தற்போது அது விராட் கோலிக்கு கிடைத்து உள்ளது.டெல்லியில் உள்ள ஷா பெரோஸ் மைதானத்தின் ஒரு பகுதியை வைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்து உள்ளது.
இது பற்றி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் ஷர்மா கூறுகையில் , சர்வேதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் பங்களிப்பு பெருமை அளிக்கிறது.அவரது சாதனையை கவுரவிப்பது பெருமையாக உள்ளது என கூறினார்.
இதற்கு முன் விளையாடி கொண்டு இருக்கும் போது முன்னாள் கேப்டன் தோனிக்கு அவரின் சொந்த ஊரில் மைதானத்தின் ஒரு பகுதிக்கு பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.