சர்பிராஸ் அகமதுவை கேப்டன் பதவியில் இருந்து மாற்ற சொன்ன பயிற்சியாளர்
மிக்கி ஆர்தர் 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். வருகின்ற 15 -ம் தேதி உடன் இவரின் பதவி காலம் முடிய உள்ளது.சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியது.
இந்நிலையில் அணியின் செயல்பாடுகளை குறித்து பாகிஸ்தான் அணியின் மேலாளர் வாசிம் கானுடன் விவாதிக்கப்பட்டது.அப்போது பேசிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ,கேப்டன் சர்பிராஸ் அகமதுவை நீக்கிவிட்டு சுழல் பந்து வீச்சாளர் சதாப் கானை குறுகிய போட்டிகளுக்கும் ,டெஸ்ட் போட்டிக்கு பாபர் அசாமை கேப்டனாக நியமனம் செய்யலாம் என கூறினார்.
மேலும் தான் இன்னும் இரண்டு வருடங்கள் அணியில் இருந்தால் அணியை சிறப்பான கொண்டுவருவேன் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.