குத்திகாட்டியவருக்கு பதிலடி கொடுத்த சின்ன ‘தல’ ! மரியாதை நிமுத்தமாக ட்வீட்டை நீக்கிய ரெய்னா?

சுரேஷ் ரெய்னா : பாகிஸ்தானின் நிருபர் ஒருவரின் டீவீட்டுக்கு தக்க பதிலடி ரிப்ளேவை ரெய்னா கொடுத்துள்ளார், பின்பு அந்த டீவீட்டை டெலீட் செய்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 தொடருக்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பைக்கு தூதராக (Ambassador) ஜமாய்க்காவின் தடகள வீரர் உசைன் போல்ட், யுவராஜ் சிங், க்றிஸ் கெயில் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர். தற்போது, மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷாஹித் அஃப்ரிடியும் இவர்களை தொடர்ந்து புதிய தூதரக ஐசிசியால் அறிவிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள விளையாட்டு தொடர்பான X கணக்கை (Account) கையாளும் நிருபர் ஒருவர், இந்தியா அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவை X தளத்தில் டேக் செய்து “ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான தூதராக ஷாஹித் அப்ரிடியை ஐசிசி நியமித்துள்ளது. ஹலோ சுரேஷ் ரெய்னா?” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு சுரேஷ் ரெய்னாவும், “நான் ஐசிசி தூதராக இல்லை, ஆனால் எனது வீட்டில் 2011 உலகக் கோப்பை உள்ளது.

மொஹாலியில் நடந்த ஆட்டத்தை நினைவில் கொள்கிறீர்களா? அது உங்களுக்கு மறக்க முடியாத சில நினைவுகளைத் தரும் என்று நம்புகிறேன்” என பதிலடி ரிப்ளெ ஒன்றை பதிவிட்டார். அதாவது, கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் மொஹாலியில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஷாஹித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியை இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதை எடுத்துக்கூறி அந்த பதிவை சுரேஷ் ரெய்னா பதிவிட்டிருந்தார்.

பின் சுரேஷ் ரெய்னா அந்த பதிவை அவரது X கணக்கில் இருந்து நீக்கி விட்டார். இதற்கு காரணமாக அதே நிருபர் அவரது X பதிவில் கூறுகையில், “சுரேஷ் ரெய்னாவும், ஷாஹித் அஃப்ரிடியும் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள். அதில் அவர் செய்த இந்த ரிப்ளெவை பற்றி தெளிவுப்படுத்தி இருக்கிறார். மேலும், அஃப்ரிடி மரியாதை நிமித்தமாக அந்த பதிவையும் டெலீட் செய்துள்ளார். இதை அஃப்ரிடியும் புரிந்து கொண்டார். தற்போது இருவரும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டை பற்றி விவாதித்து வருகின்றனர்” என அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்