முக்கியச் செய்திகள்

சென்னை அணியின் செல்லப்பிள்ளை உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல்..!

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பையில் ​​இலங்கை அணியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவுக்கு பதிலாக முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு உலகக்கோப்பையில் இலங்கை அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.  நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்த அந்த அணி, நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது போட்டியில் 102 ரன்களிலும், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

எனினும் இதன் பின்னர் நெதர்லாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இலங்கை அணி இரண்டு புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் மதீஷா பதிரனாவிற்கு தோள்பட்டையில்  காயம் ஏற்பட்டது. அதன் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

இதனால், காயமடைந்த மதீஷா பதிரனாவுக்குப் பதிலாக  இலங்கை கிரிக்கெட் அணி ஒரு நட்சத்திர வீரரை இணைத்துள்ளது. அது வேறு யாருமல்ல,  நட்சத்திர ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் தான்.  அனுபவமிக்க மேத்யூஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்கும், சிறந்த பந்து வீச்சிற்கும் பிரபலமானவர். ஏஞ்சலோ மேத்யூஸைப் பொறுத்தவரை அவர் அணியின் மூத்த வீரர் மற்றும் அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறார்.

ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் உலகக் கோப்பையில் இலங்கை அணிக்காக சிறப்பாக செயல்பட முடியும் என கூறப்படுகிறது. மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் அணிக்காக மொத்தம் 405 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கிடையில், 442 இன்னிங்ஸ்களில் 14374 ரன்கள் எடுத்துள்ளார். மேத்யூஸின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 188 இன்னிங்ஸ்களில் 7361 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 191 இன்னிங்ஸில் 5865 ரன்களையும், டி20யில் 63 இன்னிங்ஸில் 1148 ரன்களையும் எடுத்துள்ளார்.

20 வயதான மதீஷா பதிரனா 2 போட்டிகளில் விளையாடினார். அதில் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 90 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 95 ரன்களும் கொடுத்தார். இரண்டு போட்டிகளிலும் தலா 1 விக்கெட்டை மட்டுமே பறித்தார். தோனியின் தலைமையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பதிரனாவால் உலகக் கோப்பையில் தடம் பதிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

18 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

22 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

36 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

48 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago