ஐபிஎல் போட்டிகள்;துபாய் செல்லும் தோனி தலைமையிலான சிஎஸ்கே.!

Default Image

ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது துபாய் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவல் காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன.ஆனால், இந்த வருட போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த நிலையில் மீண்டும் ஏற்பட்ட கொரோனா பரவல் மற்றும் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ரா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பாதியிலேயே இப்போட்டிகள் நிறுத்தப்பட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிகளில் 60 ஆட்டங்கள் நடைபெற இருந்த நிலையில் 29 ஆட்டங்கள் மட்டுமே நிறைவடைந்திருந்தது.இதனையடுத்து,மீதி ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 இல் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில்,இந்தியன் பிரீமியர் லீக்கின்(ஐபிஎல்) மீதமுள்ள சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,ஆகஸ்ட் 15 அல்லது 20 ஆம் தேதிக்குள் துபாய் செல்லவுள்ளதாகவும்.மேலும்,டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் அதே நேரத்தில் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி அறிவிப்பு:

இதுகுறித்து,சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்:”ஆகஸ்ட் 15 ஆம் தேதி அல்லது 20 ஆம் தேதிக்குள் நாங்கள் அங்கு இருக்க விரும்புகிறோம், என்று பிசிசிஐக்கு அறிவித்துள்ளோம். அதற்கான,தேவையான அனுமதிகளைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.ஏனெனில்,அனுமதி இல்லாமல் திட்டங்களை நிறைவேற்றுவது கடினம்”,என்று கூறினார்.

தோனி தலைமை:

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி மீண்டும் வெற்றிகரமான வழிகளில்,சிறப்பான பிளேஆஃப்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.ஐபிஎல் பட்டத்தை இதுவரை மூன்று முறை (2010, 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில்)சி.எஸ்.கே அணி வென்றுள்ளது.மேலும், 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி-20 யையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தேதிகள் :

ஓமான் டி-20 உலகக் கோப்பை போட்டிகளை தொடங்குவதற்காக பிசிசிஐ உயர் அதிகாரிகள் தற்போது துபாயில் உள்ளனர்.அவர்கள் திரும்பிய பின்னரே ஐபிஎல் போட்டிகள் குறித்த தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும்,ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 18-19 தேதிகளில் மறுதொடக்கம் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திலும், ஷிகர் தவான் தலைமையிலான மற்றொரு தரப்பு அணி இலங்கையிலும் உள்ளன.

தோனியின் குறிக்கோள்:

சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, “இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை தோனி வெல்ல விரும்புகிறார், அதுவே அவரது குறிக்கோள்”, என்று தெரிவித்தார்.

தற்போது சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்கள்:

தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஜெகதீசன், ஃபாஃப் டு பிளெசிஸ் , ருதுராஜ் கெய்க்வாட், மிட்செல் சான்ட்னர், ஜோஷ் ஹஸ்லவுட், சாம் கரண் , ஜடேஜா, பிராவோ ஷார்துல் தாகூர், கரண் சர்மா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி நிகிடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pradeep ranganathan dragon AJITH
tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi