சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!
ஒரு நாள் போட்டிகளில் இருந்து திடீரென மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு பெற முடிவு செய்தது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
![marcus stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/marcus-stoinis-1.webp)
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் விளையாடமாட்டார்.
ஏனென்றால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெருவதாக திடீரென சமீபத்தில் அறிவித்திருந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக அவர் விலகியது அணிக்கு முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவே, முக்கியமான போட்டியை வைத்துவிட்டு இப்போது ஓய்வு முடிவுக்கு என்ன காரணம்? என பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில், ஆஸ்ரேலியா அணி வீரர் ஆரோன் பிஞ்ச் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு குறித்து பேசியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில் பேசும்போது ” தேர்வு குழுவும், பயிற்சியாளரும், அணித்தலைவரும் உங்களுடைய மீது நம்பிக்கை வைத்திருந்தபோது நீங்கள் இப்படியான திடீர் முடிவை எப்படி எடுத்தீர்கள்? அப்படி இந்த முடிவு உங்களுக்கு தோன்றியது என்றாலே முன்னதாகவே கூட அவர்களிடம் தெரிவித்திருக்கலாமே..
நாளின் இறுதியில், ஒவ்வொரு வீரருக்கும் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாய்ப்பு உள்ளது. மார்கஸ் ஸ்டோயினிஸின் கடந்த சில ஆண்டுகளை பார்த்தால், அவர் பெரும்பாலும் டி20 கிரிக்கெட் வரிசையை முன்னுரிமையாகக் கொடுத்துள்ளார். எனவே, அவர் டி20 போட்டிகளில் விளையாட விரும்புகிறார் என நான் நினைக்கிறேன்.
எனவே, தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகளில் நாம் ஓய்வு பெற்றுவிட்டால் டி20 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக நான் நினைக்கிறன். இருப்பினும் அவர் திடீரென இந்த முடிவை எடுத்திருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறு” எனவும் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025![IPL2025 Sanju Samson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IPL2025-Sanju-Samson.webp)
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025![ShubmanGill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ShubmanGill-2.webp)
“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!
February 12, 2025![chiranjeevi - RAM SARAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/chiranjeevi-RAM-SARAN.webp)