கேப்டன் தான் அணி வீரர்களை பிரஷர் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும் – சேவாக்..!!

Default Image

கேப்டன் தான் அணி வீரர்களை பிரஷர் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்று  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். 

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று  நடந்த 20 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியத. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து.

அடுத்ததாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது, சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சஞ்சு சாம்சன் கேப்டன் சி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பேசியுள்ளார், அவர் கூறியது ” சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருப்பது அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று நான் நினைக்கிறன். சஞ்சு சாம்சன் கேப்டன் பதவியில் பொருத்திக்கொள்ள இன்னும் நேரம் வேண்டும். திடீரென ராஜஸ்தான் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதிவியை அளித்துள்ளது.

அணியின் கேப்டனாக இருந்தால் அணியின் வீரர்களை அதிக பிரஷர் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த விதித்ததில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மிக சிறந்தவர். ராஜஸ்தான் அணியில் ஒரு பந்து வீச்சாளர் அதிக ரன்களைக் கொடுத்து விட்டால் அந்த பந்து வீச்சாளரிடம் சென்று கேப்டனாக சஞ்சு  சாம்சன் நம்பிக்கை மற்றும் ஊக்குவிக்கும்  விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்