விராட் கோலிக்கும் 18 ஜெர்ஸி எண்ணுக்கும் உள்ள பந்தம்.!

Virat Kohli 18 jersey

விராட் கோலியின் 18 ஜெர்ஸி எண்ணுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு உணர்வுப்பூர்வ பந்தம்.

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும் உலகில் பல கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டவரும், களத்தில் எப்போதும் துறுதுறுவென இருப்பவருமான விராட் கோலி, தற்போதைய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக பல சாதனைகள், மற்றும் சதங்களை வைத்துள்ளவர்களில் முக்கியமானவர்.

கிரிக்கெட்டில் சச்சினுக்கு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் எப்படியோ அதுபோல, விராட் கோலிக்கு கவர் ட்ரைவ் ஷாட் மிகவும் பிடித்தமான ஒரு ஷாட். களத்தில் எப்போதும் தனது முழு பங்களிப்பையும் வழங்குவதில் விராட்டிற்கு இணை அவர் தான். கிரிக்கெட்டிற்காக, அணிக்காக தன்னையே முழுதாக அர்ப்பணிப்பதில் சிறந்தவர்.

சச்சினின் ஜெர்சி எண் 10-ஐ போல விராட் கோலியின் ஜெர்சி எண் 18 என்பது அனைவரும் அறிந்ததே. அந்த 18 என்ற எண்ணுக்கும் கோலிக்கும் உள்ள சம்பந்தத்தை பற்றி விராட் கோலி சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கோலி கூறும்போது, 18 என்ற எண்ணை நான் தேர்ந்தெடுக்கவில்லை, முதன்முதலில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற போது எனக்கு வழங்கப்பட்ட ஜெர்சியில் 18 எண் இருந்தது.

அதன்பிறகு 18 என்ற எண் என் வாழ்வில் முக்கிய இடம்பெற்றுவிட்டது. நான் 2008 இல் இந்திய அணிக்காக முதலில் டெபுட் ஆகும்போது அன்றைய தினம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, என் தந்தை இறந்த தினம் டிசம்பர் 18, என 18 என்ற எண்ணுக்கும் எனக்கும் நிறைய உணர்வுப்பூர்வ தொடர்பு உண்டாகிவிட்டது என விராட் கோலி நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்