டி20I: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இரவு 10.30 மணிக்கு B-பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. கிரிக்கெட் போட்டிகளில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு போட்டியாக இந்த போட்டியானது இருந்து வருகிறது.
இந்த 2 அணிகளும் எப்போது மோதினாலும் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பென்பது உச்சத்தில் இருக்கும். மேலும், இரு அணிகளும் தொடர் போட்டிகளை தாண்டி ஒரு ஐசிசியின் சர்வேதச போட்டியில் விளையாடினாள் அந்த போட்டி விறுவிறுப்பு குறையாமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இது வரை இந்த 2 அணிகளும் டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் 2 முறை இங்கிலாந்து அணியும் ஒரு முறை ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி முடிவில்லாமல் இருக்கிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு ஸ்காட்லாந்து அணியுடனான போட்டியானது மழை காரணமாக நடைபெறாமல் போனது.
அதன் பிறகு ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் விளையாட இருக்கிறது. அதே நேரம் ஆஸ்திரேலியா அணி ஓமான் அணியை வீழ்த்தி ஒரு வெற்றிக்கு பிறகு இந்த போட்டிக்கு வருகின்றனர். இரு அணிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வலுவான வீரர்கள் உள்ளனர். அதன் படி விளையாட போகும் 11 வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப்…
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை…
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்…
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத…
சென்னை : தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவார்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என…
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…