ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் நடைபெற உள்ளது.இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அமைப்பு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வலியுறுத்தியது.இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும். உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை அணுகவில்லை .பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…