தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி..!
ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ச்சியாக 22 ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்தனர்.
ஆஸ்திரேலியா பெண்கள் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற சாதனையை படைத்துள்ளது. மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று நியூசிலாந்து பெண்கள் அணிகளுடன் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இது ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் 22-வது வெற்றியாகும். ஆஸ்திரேலிய பெண்கள் அணி தற்போது ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தது. பாண்டிங்கின் தலைமையின் கீழ், ஆஸ்திரேலிய ஆண்கள் அணி 2003 -ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வென்ற சாதனை படைத்தது. ஆனால், தற்போது ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக 23 போட்டிகளில் வெற்றி பெற்று பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளனர்.
இது ஒரு பெரிய சாதனை:
இந்த போட்டியின் பின்னர் பேசிய மெக் லெனிங், இது நீண்ட காலமாக இந்த அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனை. இந்த வெற்றியை நாங்கள் மூன்று ஆண்டுகளில் பதிவு செய்துள்ளோம் என கூறினார்.
இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் லாரன் டவுன் 90 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில், கேப்டன் சாட்டர்வெயிட் 32 , அமெலியா கெர் 33 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய பெண்கள் அணியில் இருந்து மேகன் ஷட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில் நிக்கோலா கேரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், இறங்கிய ஆஸ்திரேலியா அணி 38.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் என்ற இலக்கை எளிதில் அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் அலிஸா ஹீலி 65 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் எலிசி பெர்ரி ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஆஷ்லே கார்ட்னர் 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு உதவினார்.