நாளை முதல் ஆஷஸ் தொடர்; இங்கிலாந்துக்கு பெரிய அடி ஆண்டர்சன் விலகல்..!

Published by
murugan

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் 39 வயதான வேகப்பந்து வீச்சாளர் காபர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டர்சன் இல்லாததால், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜாக் லீச் ஆகிய நான்கு பந்து வீச்சாளர்களில் ஒருவரை இங்கிலாந்து தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ஆண்டர்சனுக்கு காயம் ஏதும் இல்லை என்றும்,  நேற்று  சுமார் ஒரு மணி நேரம் ஆண்டர்சன் நெட் பயிற்சி செய்தார். அவர் களத்தில் இறங்குவதற்கு தகுதியானவர் என்றும் உறுதி செய்துள்ளது. இருப்பினும், டிசம்பர் 16 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆண்டர்சன் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆஷஸ் 2019-ல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயமடைந்தபோது, அவர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த உலகின் ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் (632) மூன்றாவது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

4 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

3 hours ago