அரங்கமே மெய்சிலிர்ப்பு…1 லட்சம் பேருக்கு மேல் பாடிய “வந்தேமாதரம்”.! வைரலாகும் வீடியோ.!
16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், அதன் துவக்க நிகழ்ச்சி அட்டகாசமாக நடைபெற்றது என்றே கூறலாம். நிகழ்ச்சியில் டாப் நடிகைகளான தமன்னா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
அதற்கான, வீடியோக்களும்ம் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது போட்டி ஆரம்பிக்கும் முன்னதாக அரங்கில் வந்தே மாதிரம் பாடல் போடப்பட்ட ஒரு வீடியோ வருகிறது.
Video of the day – 1 Lakh people singing Vande Mataram ???? pic.twitter.com/KBLgWbhvbS
— Johns. (@CricCrazyJohns) March 31, 2023
அந்த வீடியோவில் “ஏ ஆர் ரகுமான் இசையமைத்து பாடிய வந்தேமாதரம் பாடல் அரங்கில் இசைக்கப்பட்டது. அந்த பாடலை அரங்கில் இருந்த 1 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் வந்தேமாதரம் பாடலை என ஒருங்கிணைந்து பாடினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் அருமை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.