தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா.! ஆஷஸ் 4வது போட்டி இன்று துவக்கம்.!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் துவங்க உள்ளது.
கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் டெஸ்ட் தொடரில் மிக முக்கியமான தொடர் ஆஷஸ் தொடர். இந்த போட்டி இந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் கொண்ட முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என நிலையில் முன்னிலை வகித்து வருகிறது.
பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்சில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கடைசியாக நடந்து முடிந்த 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இன்று 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு கடந்த முறை வெற்றி பெற்றது போல அடுத்த 2 போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலிய அணி ஏதேனும் ஓரூ போட்டியில் வென்றாலே தொடரை கைப்பற்றிவிடும் நிலையில் இருக்கிறது. இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.