முதல் 45 நிமிட மோசமான ஆட்டத்தால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதியை இழந்தது-விராட் கோலி !
நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி , நியூஸிலாந்து அணி உடன் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது.
முதலில் விளையாடி நியூஸிலாந்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்தது.பின்னர் 240 என்ற இலக்குடன் களமிங்கிய இந்திய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி , பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு நியூஸிலாந்து அணி அதிக ரன்கள் அடிக்க விடாமல் செய்தோம்.அதே வேகத்துடன் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உடன் களமிறங்கினோம்.
ஆனால் நியூஸிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பந்துகளை வீசி இந்திய அணியை கட்டுப்படுத்தினர்.ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்திற்கு தோனி மிக சிறப்பாக கைகொடுத்தார்.
முதலில் விளையாடிய 45 நிமிட மோசமான ஆட்டத்தால் இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்ல தகுதியை இழந்தது. நெருக்கடியான சூழ்நிலையில் நியூஸிலாந்து அணி வீரர்கள் திறமையாக சமாளித்தார்கள் மேலும் இந்த வெற்றிக்கு முழு தகுதியும் அவர்களுக்கு உள்ளது என கூறினார்.