ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி! பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஜூன் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி உள்ளது.
தற்போது ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி 8 ஓவரில் 18 ரன்கள் எடுத்து, தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா விளையாடி வருகின்றனர். சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (w), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ (w), ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன், ஜோஷ் டங்கு, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.