தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
தென்னாபிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்,3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில்,தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மதியம் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு தொடங்குகிறது.3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற வெற்றி முனைப்புடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
அதே சமயம்,சொந்த மண்ணில் தோல்வியை தழுவக் கூடாது என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
சாத்தியமான இந்திய லெவன் அணி:கேஎல் ராகுல்,மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா,விராட் கோலி (கேப்டன்),அஜிங்க்யா ரஹானே,ரிஷப் பந்த்,ரவிச்சந்திரன் அஷ்வின்,ஷர்துல் தாக்கூர்,முகமது ஷமி,ஜஸ்பிரித் பும்ரா,முகமது சிராஜ்.
சாத்தியமான தென்னாப்பிரிக்கா லெவன் அணி: டீன் எல்கர்,ஐடன் மார்க்ரம்,கீகன் பீட்டர்சன்,ராஸ்ஸி வான் டெர் டுசென்,டெம்பா பவுமா,கைல் வெர்ரேய்ன்,மார்கோ ஜான்சன்,ககிசோ ரபாடா,கேசவ் மகாராஜ்,லுங்கி என்கிடி,டுவான் ஆலிவியர்.
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…