மும்பை:இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்தியா -நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,முதலில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.
இந்நிலையில்,இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே 2-வது(கடைசி) டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்டில் போட்டியில் விளையாடுகிறார்.புஜாராவுக்கு பதிலாக கோலி களமிறங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் முதல் டெஸ்ட் போட்டி, அறிமுகம் போட்டியிலே முதல் இன்னிங்சில் சதம் விளாசி 105 ரன்களும், 2-வது இன்னிங்சில் அரை சதம் விளாசி 65 ரன்களும் அடித்தார்.சுழற்பந்தில் அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…