ஐபிஎல் வரலாற்றில் 2-வது வீரர்…மலிங்கா ஓரம் கட்டிய யுஸ்வேந்திர சாஹல்.!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தனது,133-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் சாஹல், புதன்கிழமை (நேற்று) பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஜிதேஷ் ஷர்மாவை விக்கெட் எடுத்தார்.
இதன் மூலம் சாஹல் தனது 171-வது விக்கெட்டை வீழ்த்திய இந்த சாதனையை படைத்தார். இவருக்கு முன்னதாக மலிங்கா 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தற்போது அவரை விட 1 விக்கெட்கள் அதிகமாக எடுத்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பட்டியலில் இப்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Climbing to the ???? of an elusive list!@yuzi_chahal is now second in the list of all time leading wicket-takers in the history of #TATAIPL ????#RRvPBKS pic.twitter.com/2iWrobm5ud
— IndianPremierLeague (@IPL) April 5, 2023
மேலும், இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 166 விக்கெட்டுகளுடன் அமித் மிஸ்ரா நான்காவது இடத்திலும், ரவிச்சந்திரன் அஷ்வின் 158 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.