INDvENG : 2வது நாள் ஆட்டம் நிறைவு! இங்கிலாந்து பந்துவீச்சில் இந்தியா தடுமாற்றம்!

Published by
பால முருகன்

இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் எடுத்தனர். இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களில் 10  விக்கெட் இழப்பிற்கு 353  ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரூட் 122 ரன்களும், ராபின்சன் 58, சாக் கிராலி 42 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்திஉள்ளர்.

அடுத்ததாக தங்களுடைய முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய  இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார். மற்றோரு பக்கம் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு ரோஹித்  ஆட்டமிழந்து வெளியேறினார்.

Read more – #INDvsENG : இந்தியாவை புரட்டி போட்ட ஜோ ரூட் ..! 302 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி ..!

சுப்மன் கில் 38, ரஜத் படிதார் 17, ரவீந்திர ஜடேஜா 12 எடுத்து ஆட்டமிழந்தனர்.  பிறகு நிதானமாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 73  ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். தொடர்ச்சியாக விக்கெட் விழுந்த காரணத்தால் தற்போது இந்திய மோசமான கட்டத்தில் இருக்கிறது.

இந்நிலையில், 2-வது நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் துருவ் ஜூரல் 30 *, குல்தீப் யாதவ் 17* ரன்களுடன் இருக்கிறார்கள்.  2-வது நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ள நிலையில்,  இங்கிலாந்து அணியை விட 134 ரன்கள் பின் தங்கி இருக்கிறது.

மேலும். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஷயீப் பஷீர் 4 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா தடுமாறி விக்கெட்களை பறிகொடுத்து இருக்கிறது. நாளை தொடங்கும் 3-வது நாள் ஆட்டத்தில் நிதானமாக விளையாடி ரன்களை குவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

20 minutes ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

3 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

3 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

4 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

23 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

24 hours ago