#ICC T20 World Cup 2021:டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு..!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஆண்களுக்கான டி-20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடர் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது. அதன்படி,முன்னதாக,இந்திய அணியின்,இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில்,உலகக்கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,தசுன் ஷனகா இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்,இலங்கை அணியானது அக்டோபர் 18 அன்று நமீபியாவுக்கு எதிராக அபுதாபியில் முதல் சுற்றில் குழு A இல் தங்கள் போட்டியைத் தொடங்குகிறது.

இலங்கை அணி வீரர்கள்:

தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சயா டி சில்வா(துணைக் கேப்டன்), அவிஷ்கா பெர்னான்டோ, சாரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, கமிந்து மென்டிஸ், குஷால் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, லஹிரு மதுசங்கா, துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப், மகேஷ் தீக்சனா, பிரவீன் ஜெயவிக்ரமா.

காத்திருப்பு வீரர்கள்:

லஹிரு குமாரா, புலினா தாரங்கா, பினுரா பெர்னான்டோ, அகிலா தனஞ்சயா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்