டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்து முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் -ஆரோன் பின்ச்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022க்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் அதற்கான கவுண்டவுன் ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியை முன்னிட்டு இந்த 100 நாட்களை கொண்டாடும் வகையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் ஆரோன் பின்ச், ஷேன் வாட்சன், வக்கார் யூனிஸ் மற்றும் மோர்னே மோர்கல் போன்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் உலகக் கோப்பை டிராபி சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், கூறுகையில் “ஆஸ்திரேலியா மிக பெரிய மைதானத்தை கொண்டுள்ளதால் இந்த உலக கோப்பை போட்டியில் சூழல் பந்து வீச்சு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நினைக்கிறேன்” எனக் கூறினார்.
மேலும், மிடில் ஓவர்களில் ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியமாக இருக்கும் என்றார்.