இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் தொடங்கியது..இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்: அஜின்கிய ரஹானே (கேப்டன்),முரளி விஜய்,ஷிகர் தவான்,புஜாரா,ராகுல்,தினேஷ் கார்த்திக்,ஹர்டிக் பாண்டியா ,அஷ்வின்,ஜடேஜா,இஷாந்த் சர்மா,உமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்:ஆஸ்கார் (கேப்டன்),சேசாத்,அஹமடி,ஷாஹிடி,ஷா,அப்சர்,நபி ,ரஷித் கான்,யாமின்,வாபாடர்,முஜீப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பின்னர் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் விஜய் களமிறங்கினர்.தொடக்க முதலே அதிரடியாகிய விளையாடிய தவான் 87 பந்துகளில் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார்.பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஆப்கான் வீரர் ரஷித் கான் ஓவரை தவான் வெளுத்து வாங்கினார்.
ரஷித் கான் 7 ஓவரில் 51 ரன்கள் கொடுத்துள்ளார்.மேலும் தவான் புதிய சாதனையை படைத்துள்ளார்.இந்திய வீரர்களில் இதுவரை யாரும் மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் சதம் அடித்ததில்லை.அந்த சாதனையை முதல் இந்திய வீரராக தவான் செய்தார்.
பின்னர் தவான் 107 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இந்திய அணி 46.4 ஓவர்களில் 258 ரன்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.ராகுல்(41), விஜய்(94) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 78 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான்(107),விஜய்(105),ராகுல்(54) ரன்கள் அடித்தனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவு ஆகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…