கிரிக்கெட் கேரியரில் சிறந்த தருணம் அது தான் !! தோனியை புகழ்ந்த ராகுல் !

KLRahul Praised MSD

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக இன்று இரவு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சொப்பர் கிங்ஸ் அணியும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுவுள்ளது. இந்நிலையில், லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.

நடைபெற இருக்கும் டி20  உலகக்கோப்பை அணியில் கே.எல்.ராகுல் இடம்பெறுவாரா என்று கேட்டால் அது கேள்வி குறி தான். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக சில நாட்கள் விளையாடாமல் இருந்த கே.எல்.ராகுல் காயத்திலுருந்து மீண்டு நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் எந்த ஒரு போட்டியிலும் ஒரு பெரிய விளையாட்டையும் விளையாடாமல் தடுமாறி வருகிறார்.

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பிரத்யேக பேட்டி ஒன்று அளித்திருந்தார். அவர் அளித்த அந்த பேட்டியில், ” எம்.எஸ்.தோனி எப்போதுமே ஒரு வெளிப்படையாக நபர் ஆவார். நான் தோனியிடமிருந்து டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் T20I போட்டிகளுக்கான அறிமுக தொப்பிகளைப் பெற்றது தான் எனது கிரிக்கெட் கேரியரில் சிறந்த தருணமாக உணர்கிறேன். என்னை அவர் தான் அறிமுகம் செய்து வைத்தார்.

அவரது கைகளில் இருந்து தொப்பியை பெற்றது தான் இது வரை நான் பெற்ற சிறப்பு தருணங்களில் அது முதலிடத்தில் இருக்க கூடிய ஒன்றாகும். மேலும், அவருடன் விளையாடியது தான் எனது சிறப்பான நினைவுகளில் எப்போதும் தனித்துவமாக இருக்கும்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கே.எல்.ராகுல் பேசி இருந்தார். திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழும் கே.எல்.ராகுல் தோனியின் ரசிகனாகவும், அவரை தன் குருவாகவும் வைத்து வளர்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Maharashtra Election 2024 Result
bjp bihar
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024