நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ரோஹித் சர்மா எதிரணிக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து பேசியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய வீரர் ஒருவர் தான் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் இந்த நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை பற்றி பேச விரும்புகிறேன். ரோஹித் சர்மா களமிறங்கும்போது இங்கிலாந்து வீரர்களின் கண்கள் அனைத்துமே ரோஹித் பக்கம் தான் இருந்தது. அவர் இறங்கி விளையாடி என்ன செய்யப்போகிறார் என்று நாங்கள் பார்த்துக்கொண்டு இருந்தோம். அவர் அட்டமிழந்தபோது நாங்கள் அப்படி அவரை பார்த்த காரணம் அவர் இதற்கு முன்பு விளையாடிய விளையாட்டுகள் தான்.
அவருடைய பேட்டிங் தோரணையே அவர் அடுத்த என்ன செய்யப்போகிறார் என எதிரணி பந்துவீச்சாளர்களை யோசிக்க வைப்பார். ஒரு அணியே அவருடைய ஆட்டத்தை பதற்றத்துடன் பார்ப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் மைதானத்திற்குள் வரும்போது, அவர் மையத்தில் இருந்தாலும், கூடத்தில் இருந்தாலும் கூட, ஒரு மாயாஜாலம் உருவாகும்.
அவரது ஆட்டம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஒரு பெரிய எடுத்துக்காட்டு சொல்லவேண்டும் என்றால் ஒன்று இரண்டு இல்லை அதிகமாக இருக்கிறது. இப்போது அவர் விளையாடும் விளையாட்டு பழைய பார்மை ஒப்பிடும்போது குறைவாக இருந்தாலும் கூட எப்போது வேண்டுமானாலும் பழைய பார்முக்கு திரும்புவார்.
ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் நட்சத்திரங்களின் ஆட்டம் காண்பதையே ரசிகர்கள் அனுபவிக்க வேண்டும். எனவே, முதல் போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் கூட இரண்டாவது போட்டியில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு சிறப்பாக விளையாட கூடிய ஒரு வீரர் தான்” எனவும் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மேலும், ரோஹித் ஷர்மாவின் சமீப கால பார்ம் மிகவும் மோசமாக இருப்பதன் காரணமாக அவருடைய கம்பேக்காக ரசிகர்கள் காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.