அந்த காலம் வேதனை தரும் வலி! கசப்பான சம்பவங்களை பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், நீண்ட மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். வரவிருக்கும் ஆசிய 2023 கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனை முன்னிட்டு பெங்களூரில் தற்போது ஆறு நாள் கண்டிஷனிங் முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில், முதுகில் அறுவை சிகிச்சை நடைபெற்றபோது அந்த வலி தனக்கு மிகவும் வேதநாயக இருந்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வேதனை தரும் வலி
இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய முதுகில் வலி ஏற்படும்போது எனக்கு வந்த வலி மிகவும் கொடியது. அந்த காலம் “வேதனை தரும் வலி”நான் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்பே எனக்கு சிறிது காலமாக முதுகில் இந்த பிரச்சினை இருந்தது, ஆனால் நான் ஊசிகளை எடுத்துக்கொண்டு பல வழிகளில் சென்று நான் நிலையாக இருக்கவேண்டும் என நினைத்தேன்.
அறுவை சிகிச்சை
வலி மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். அதனால் நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அறுவை சிகிச்சை செய்யும்போது என்னுடைய நரம்பு பகுதி மிகவும் வலித்தது. அந்த நேரத்தில், நான் வலியில் துடித்தேன். இப்பொது நான் விளையாட வரும் ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை வலி இருந்தது.
வலி குறையாமல் இருப்பது கடினம்
நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கும்போது உங்களுக்கு காயம் ஏற்பட்டு அந்த காயம் வலி கூட குறையாமல் இருந்தால் எப்படி இருக்கும். நம்மளுடைய மனதில் கெட்டதாக பல விஷயங்கள் தோணும். அந்த தருணத்தில் என்னை உற்சாகபடுத்த உதவி ஊழியர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் இருந்தனர். காயத்தில் இருந்து மீண்டவுடன் கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சிகளை செய்ய தொடங்கினேன். வரவிருக்கும் போட்டிக்களில் பழைய மாதிரி விளையாடுவேன்” எனவும் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025