3-ஆம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 257 ரன்கள் அடித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், ஷாபாஸ் நதீம், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க வீரர்களாக ரோகித், சுப்மான் கில் இருவரும் இறங்கினார்கள். ஆனால் இருவரும் நிலைத்து நிற்கவில்லை .சுப்மான் கில் 29, ரோகித் 6 ரன்களுடன் வெளியேறினார்கள். பின்னர், இறங்கிய துணை கேப்டன் ரஹானே 1 , கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார்கள்.
இந்திய அணி சரிவில் இருந்த சமயத்தில், புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்னை சற்று உயர்த்தினார்கள்.புஜாரா ஒரு புறம் பொறுமையாக விளையாட மறுபுறம் பண்ட் அதிரடியாக விளையாடினார்.ஆனால் ஒரு கட்டத்தில் புஜாரா 73 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவர் ஆட்டமிழந்து சென்ற சிறிது நேரத்தில் அதிரடியாக விளையாடிய பண்ட் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். 88 பந்துகளில் 9 பவுண்டரிகள் ,5 சிக்சர்கள் அடித்தார்.இறுதியாக 3-ஆம் நாள் ஆட்டம் முடிந்தது.3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 74 ஓவர்களில் 257 ரன்கள் அடித்துள்ளது.வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடனும் மற்றும் அஸ்வின் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் டொமினிக் பெஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.இந்திய அணி இங்கிலாந்தை விட 321 ரன்கள் பின் தங்கியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…